மீண்டும் தந்தையாகும் விராட் கோலி?
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு வாமிகா எனும் பென் குழைந்தை பிறந்து. தற்போது வாமிகாவிற்கு 2 வயதாகும் நிலையில், அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக விராட் கோலி மீண்டும் அப்பாவாக போவதாக தகவல் தெரிவிக்கின்றது. எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தற்போது இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. வரும் 5 ஆம் தேதி தொடங்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதையடுத்து வரும் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.