இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த வீராங்கனை மிதாலி ராஜ். 1999ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக ஆடிவந்த மிதாலி ராஜ், 12 டெஸ்ட், 232 ஒருநாள், 89 டி20 போட்டிகளில் ஆடி முறையே, 699, 7805, 2364 ரன்களை குவித்துள்ளார்.

Advertisement

இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீராங்கனைகளில் ஒருவர். 

Advertisement

23 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி, மகளிர் கிரிக்கெட்டில் சாதனைகள் பல படைத்த மிதாலி ராஜ், நேற்று(ஜூன்8) அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மிதாலி ராஜிடம், உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த மிதாலி ராஜ், இதே கேள்வியை கிரிக்கெட் வீரர்களிடம் கேட்பீர்களா..? உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீராங்கனை பிடிக்கும் என்று கிரிக்கெட் வீரர்களிடம் கேட்பீர்களா? என்று மிதாலி ராஜ் கேட்க, வாயடைத்துப்போய் மறுவார்த்தை பேசவில்லை அந்த நிருபர்.

ஆடவர் கிரிக்கெட் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் கிரிக்கெட்டுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில்லை. மகளிர் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களும் குறைவுதான். அந்த ஆதங்கம் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உண்டு. அப்படியிருக்கையில், அந்த நிருபரின் கேள்வி, மிதாலி ராஜுக்கு கோபத்தை வரவழைத்துவிட்டது. அதன் விளைவாகத்தான், அவர் இப்படியொரு பதிலை அளித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News