முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. லாபஸ்சேன் சதமடித்து 103 ரன்னிலும், வார்னர் 95 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 93 ரன்னிலும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 51 ரன்னிலும் அவுட்டாகினர்.

Advertisement

இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் மலான் 80 ரன்னிலும், ஜோ ரூட் 62 ரன்னிலும் அவுட்டாகினர். பென் ஸ்டோக்ஸ் 34 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 24 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், லயான் 3 விக்கெட்டும், கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து, 237 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. லாபஸ்சேன் 51 ரன்னும், டிராவிஸ் ஹெட் 51 ரன்னும், கேமரூன் கிரீன் 33 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், மலான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 34, ஹமீத் ரன் எடுக்காமலும், டேவிட் மலான் 20 ரன்னுடனும், ஜோ ரூட் 24 ரன்னிலும் அவுட்டாகினர். 82 ரன்கள் எடுப்பதற்குள் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து, நான்காம் நாள் ஆட்டத்தை முடித்தது. 

இதையடுத்து இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் - கிறிஸ் வோக்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. 

மேலும் அந்த அணி வெற்றி பெற இன்னும் 326 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி இன்னும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் இப்போட்டியில் வெற்றிபெறும். இதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது வெற்றியை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளதாகவே தெரிகிறது. 

இறுதி நாளான இன்று மீதமுள்ள 6 விக்கெட்டுகளை கைப்பற்றினால் ஆஸ்திரேலியா இரண்டாவது வெற்றியை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News