பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
ஏற்கெனவே ஆஸ்திரேலிய முதலிரு போட்டிகளையும் வென்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்டுக்கான ஆச்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். அதேசமயம் காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹசில்வுட்டிற்கு பதிலாக பீட்டர் போலண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.