இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
Advertisement
மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியும் சிட்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகுறது.
Advertisement
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் இத்தொடரின் போது காயமடைந்தார். அதன் காரணமாக அவர் கடந்த சில போட்டிகளிலிருந்து விலகினார்.
இந்நிலையில் அவரது காயம் இன்னும் குணமடையா காரணத்தால் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை ஆஸ்திரேலியா தேர்வு குழுவினரும் உறுதிசெய்துள்ளனர். இதன் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஜெய் ரிச்சர்ட்சன், ஸ்காட் போலண்ட் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.