ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2ஆவது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது.

Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அதேவேளையில் பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றிருந்தனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

Advertisement

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இன்றைய ஆட்டத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். இருப்பினும் ஹாங்காங் அணியின் பந்து வீச்சு எந்த வகையில் இருக்கும் என்பது புதிராகவே உள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும். அநேகமாக இன்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறக்கப்படக்கூடும். அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

ஹாங்காங் அணியானது கரோனா பெருந்தொற்று காலத்தால் 2020ஆம் ஆண்டு மார்ச் 6 முதல் 2022ஆம் ஆண்டு ஜூலை 11 வரை கிரிக்கெட்டில் இருந்து விலகியே இருந்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதி சுற்றில் பங்கேற்கும் விதமக அந்த அணி கடந்த மாதம்தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளது. இந்த காலத்தில் ஹாங்காங் அணி இரு டி 20 உலகக் கோப்பைகளை தவறவிட்டது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடுவதை அரிய வாய்ப்பாகவே ஹாங்காங் அணி கருதுகிறது. 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாங்காங் வெற்றிக்கு அருகே நெருங்கியது. 286 ரன்கள் இலக்கை விரட்டிய நிலையில் 26 ரன்கள் வித்தியாசத்தில்தான் ஹாங்காங் தோல்வி கண்டிருந்தது. 115 பந்துகளில் 92 ரன்கள் விளாசியிருந்த நிஜாகத் கான் தலைமையில்தான் ஹாங்காங் தற்போது களமிறங்க உள்ளது.

உத்தேச லெவன்

Advertisement

இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

ஹாங்காங் - யாசிம் முர்தாசா, நிஜாகத் கான் (கே), பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, அய்சாஸ் கான், ஸ்காட் மெக்கெக்னி, ஜீஷன் அலி, ஹாரூன் அர்ஷாத், எஹ்சான் கான், முகமது கசன்ஃபர், ஆயுஷ் சுக்லா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News