செப்.5 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை தொடர் - தகவல்
Asia Cup 2025: எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டியானது செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம். மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவில் எதிவரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனால் இதற்கிடையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் இந்திய பங்கேற்குமா என்ற கேள்விகள் அதிகரித்திருந்தது. ஏனெனில் தற்போதைய ஆசிய கிரிக்கெட் சங்கத்தினுடைய தலைவராக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி பொறுப்பு வகித்து வருகிறார்.
இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் அனைத்து தொடர்களிலிருந்து விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வாரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும், அதேசமயம் இத்தொடரை நடத்தும் உரிமையை பிசிசிஐ தாக்க வைத்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
அதிலும் குறிப்பாக இந்திய அணியானது செப்டம்பர் 7ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அனைத்து அணிகளும் இத்தொடரில் பங்கேற்க அந்தந்த அரசாங்கங்களிடமிருந்து ஒப்புதல் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த தொடரின் இறுதிப்போட்டியானது செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.