UAE vs OMN, Asia Cup Match: ஓமனுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம், அலிஷன் ஷராஃபு  இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

Advertisement

ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய யுஏஇ அணிக்கு அலிஷன் ஷராஃபு - முகமது வசீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆபாரமாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

Advertisement

இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 88 ரன்களை எட்டிய நிலையில், அலிஷன் ஷராஃபு 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஆசிஃப் கனும் 2 ரன்களில் நடையைக் கட்ட, அதிரடியாக விளையாடி வந்த முகமது வசீம் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 69 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் முகமது சோயப் 21 ரன்களையும், ஹர்ஷித் கௌசிக் 19 ரன்களையும் சேர்க்க, யுஏஇ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. ஓமன் அணி தரப்பில் ஜிதன் ராமநந்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Also Read: LIVE Cricket Score

பின்னார் இலக்கை நோக்கி விளையாடிய ஓமன் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அந்த அணியில் ஆர்யன் பிஸ்ட் 24 ரன்களையும், வினைக் சுக்லா 20 ரன்களையும், ஜதிந்தர் சிங் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 18.4 ஓவர்க்ளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. யுஏஇ தரப்பில் ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் யுஏஇ அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வெற்றி பெற்றது.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News