சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வீரர்களுக்கான ஆசிய லெண்ட்ஸ் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று  நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆசிய ஸ்டார்ஸ் மற்றும் இந்தியன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

உதய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியன் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்  செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியன் ராயல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. இதில் நமன் ஓஜா 5 ரன்னிலும், ராகுல் யாதவ் 4 ரன்னிலும் என ஆட்டமிழக்க, கேப்டன் ஃபசல் 11 ரன்களுக்கும், நகர் 16 ரன்களிலும், மனன் சர்மா 14 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய சஞ்சய் சிங் அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்துடன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தா சஞ்சய் சிங் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். 

இதனால் இந்தியன் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆசிய ஸ்டர்ஸ் அணி தரப்பில் ஈஸ்வர் பாண்டே 3 விக்கெட்டுகளையும், ரிஷி தவான், முனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட்ட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆசிய ஸ்டார்ஸ் அணிக்கு ரிஷி தவான் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

அதேசமயம் மறுமுனையில் விளையாடிய மெஹ்ரன் கான் ரன்கள் ஏதுமின்றியும், காஷ்யப் பிரஜபதி 15 ரன்னிலும், தில்ஷன் முனீவிரா 2 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ரிஷி தவானுடன் இணைந்த ராகவ் தவானும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷி தவான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 83 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகவ் தவான் 37 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆசிய ஸ்டார்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியன் ராயல்ஸ் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை ரிஷி தவானும், தொடர் நாயகன் விருதை மெஹ்ரான் கானும் வென்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News