AU-W vs SA-W 1st Semifinal ICC Women's T20 World Cup 2024: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறி அசத்தின.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.   

Advertisement

AU-W vs SA-W 1st Semifinal: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.17 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

AU-W vs SA-W 1st Semifinal Pitch Report

ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 107 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 49 முறையும், சேஸிங் செய்த அணி 57 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

AU-W vs SA-W 1st Semifinal Head-to-Head 

  • மோதிய போட்டிகள் - 10
  • ஆஸ்திரேலியா மகளிர் அணி - 09
  • தென் ஆப்பிரிக்க மகளிர் அணி - 01
  • முடிவில்லை - 00
Advertisement

AU-W vs SA-W 1st Semifinal: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Australia Women vs South Africa Women Possible XIs 

Advertisement

ஆஸ்திரேலிய மகளிர் அணி: பெத் மூனி, ஆஷ்லே கார்ட்னர், அலிசா ஹீலி (கே), எல்லிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், சோஃபி மோலினக்ஸ், மேகன் ஷட், டார்சி பிரவுன்

தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி: தஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்ட் (கே), மரிஸான் கேப், அன்னேக் போஷ், சோலே ட்ரையோன், சுனே லூஸ், நதின் டி கிளார்க், சினாலோ ஜாஃப்டா, அன்னேரி டெர்க்சன், நோன்குலுலேகோ மலாபா, அயபோங்கா காக்கா

AU-W vs SA-W 1st Semifinal Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: பெத் மூனி, அலிசா ஹீலி
  • பேட்டர்ஸ்: டாஸ்மின் பிரிட்ஸ், லாரா வால்வார்ட்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஆஷ்லே கார்ட்னர் (கேப்டன்), மரிஸான் கேப் (துணை கேப்டன்), சோலே ட்ரையன், ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட்
  • பந்துவீச்சாளர்கள்: நோன்குலுலெகோ மலாபா, சோஃபி மோலினக்ஸ்
Advertisement

AU-W vs SA-W 1st Semifinal Dream11 Prediction, Today Match AU-W vs SA-W, AU-W vs SA-W Dream11 Team, Australia Women vs South Africa Women, Fantasy Cricket Tips, AU-W vs SA-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the ICC Women's T20 World Cup 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News