ஆஸ்திரேலியா vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia vs India 4th Test Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ள்து.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 26) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்வதற்கும் அதிக வாய்ப்பை பெரும் என்பதலும் ரசிகர்கள் கூடுதல் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
AUS vs IND 4th Test: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
- இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்
- நேரம் - டிசம்பர் 26, அதிகாலை 5.00 மணி (இந்திய நேரப்படி)
AUS vs IND 4th Test: Pitch Report
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது மெல்போர்னின் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை 117 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 57 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 42 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 307 ரன்களாக உள்ள நிலையில், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 172 ரன்களாக மட்டுமே உள்ளது. மேலும் இங்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகத்தை வழங்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதாலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
AUS vs IND 4th Test: Where to Watch?
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி பிளர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
AUS vs IND 4th Test: Head To Head Record
- மோதிய போட்டிகள் - 110
- ஆஸ்திரேலியா - 46
- இந்தியா - 33
- முடிவில்லை - 30
Australia vs India 4th Test Probable Playing XI
ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.
இந்திய அணியின் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ஷுப்மான் கில், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி/வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
AUS vs IND 4th Test: Dream11 Team
- விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், அலெக்ஸ் கேரி
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் (கேப்டன்)
- ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, மிட்செல் மார்ஷ்
- பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா(துணைக்கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்
AUS vs IND 4th Test Dream11 Prediction, AUS vs IND Dream11 Prediction, Today Match AUS vs IND, AUS vs IND Test Series, AUS vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs India
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.