Australia vs India 5th Test Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் டிராவிலும் முடிவடைந்துள்ளது. 

Advertisement

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜனவரி 03) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி இரண்டு வெற்றிகளைப் பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளதால் இப்போட்டியில் அந்த அணி தோல்வியைத் தவிர்த்து பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.

Advertisement

அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அனால் இப்போட்டியில் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும். இதுதவிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் இது மிகவும் முக்கியமான போட்டியாகும். இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

AUS vs IND 5th Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
  • இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
  • நேரம் - ஜனவரி 03, அதிகாலை 5.00 மணி (இந்திய நேரப்படி)

AUS vs IND 5th Test: Pitch Report

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 47 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 43 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 318 ரன்களாக உள்ள நிலையில், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 169 ரன்களாக மட்டுமே உள்ளது. மேலும் இங்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகத்தை வழங்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதாலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Advertisement

AUS vs IND 5th Test: Where to Watch?

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி பிளர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

AUS vs IND 4th Test: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 111
  • ஆஸ்திரேலியா  - 47
  • இந்தியா - 33
  • முடிவில்லை - 30
Advertisement

Australia vs India 4th Test Probable Playing XI

ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.

இந்திய அணியின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா/ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த்/துருவ் ஜூரல் நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா/பிரஷித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Advertisement

AUS vs IND 4th Test: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - அலெக்ஸ் கேரி
  • பேட்ஸ்மேன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட்
  • ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, பியூ வெப்ஸ்டர்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா(துணைக்கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்)

AUS vs IND 5th Test Dream11 Prediction, AUS vs IND Dream11 Prediction, Today Match AUS vs IND, AUS vs IND Test Series, AUS vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs IND Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs India

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News