ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டின் செய்ய அழைத்துள்ளது. 

Advertisement

இதில் பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரர் காம்ரன் குலாமிற்கு லெவனில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணியைப் பெறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் மற்று கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 12 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 24 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய பாபர் ஆசாம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில் 37 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் காம்ரன் குலாம் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த துணைக்கேப்டன் சல்மான் அலி ஆகவும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் பாகிஸ்தான் அணி 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், காம்ரன் குலாமின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்படி, இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை பாட் கம்மின்ஸ் வீசிய நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொள்ள முடியாத பவுன்சராக வீசினார். இதனை சற்று எதிர்பாராத காம்ரன் குலாம் பந்தை தவறவிட எண்ணி மேல குதிக்க, பந்து நேராக அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. ஒருகணம் என்ன நடந்தது என புரியாமல் காம்ரன் குலாம் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News