பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. மேலும் இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொத்தனர். இருவரும் நிதான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவிட் வார்னர் 38 ரன்களுக்கும், உஸ்மான் கவாஜா 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 42.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மார்னஸ் லாபுசாக்னே 14 ரன்களிலும், ஸ்மித் 2 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News