ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia vs Pakistan 2nd ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் அடைந்த வெற்றியின் உத்வேகத்துடன, பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சியில் தொல்வியுடனும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளனர். இதுதாவிர்த்து இரு அணிகளும் அதிரடியான வீரர்களும், உலகத்தர வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
AUS vs PAK 2nd ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
- இடம் - அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானம், அடிலெய்ட்
- நேரம் - நவம்பர் 08, காலை 9 மணி (இந்திய நேரப்படி)
AUS vs PAK 2nd ODI Pitch Report
இப்போட்டி நடைபெறும் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவிலேயே பேட்டர்களுக்கு அதிக சாதகத்தை வழங்கும் மைதானமாக இருந்து வருகிறது. மேலும் இங்கு இதுவரை 93 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில், முதலில் பேட்டிங் செய்த அணி 49 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 42 முறையும் என வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 226 ரன்களாக உள்ள நிலையில், இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்சமாக 369 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.
AUS vs PAK ODI Head To Head Record
- மோதிய போட்டிகள் - 109
- ஆஸ்திரேலியா - 71
- பாகிஸ்தான் - 34
- முடிவில்லை - 04
AUS vs PAK 2nd ODI: Where to Watch?
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம்.
Australia vs Pakistan 2nd ODI Probable Playing XI
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஆரோன் ஹார்டி, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: அப்துல்லா ஷஃபீக், சைம் அயூப், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன்), காம்ரன் குலம், சல்மான் அலி ஆஹா, முகமது இர்பான் கான், ஷாகின் ஷா அஃப்ரிடி, அமீர் ஜமால், ஹாரிஸ் ராவுஃப், முகமது ஹஸ்னைன்.
AUS vs PAK 2nd ODI Dream11 Team
- விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்), ஜோஸ் இங்கிலிஸ்
- பேட்ஸ்மேன்கள் - ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பாபர் ஆசாம், மார்னஸ் லபுஷாக்னே, காம்ரன் குலாம்
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட்
- பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஷஹீன் அஃப்ரிடி.
AUS vs PAK 2nd ODI Dream11 Prediction, AUS vs PAK Dream11 Prediction, Today Match AUS vs PAK, AUS vs PAK ODI Series, AUS vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs PAK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs Pakistan
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.