Australia vs Pakistan 2nd T20I Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி தற்சயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகித்துள்ளது. 

Advertisement

இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் பாகிஸ்தான் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், தொடரையும் சமன்செய்ய இந்த வெற்றியானது அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அசத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

Advertisement

AUS vs PAK 2nd T20I ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
  • இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
  • நேரம் - நவம்பர் 14, மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

AUS vs PAK 2nd T20I Pitch Report

இப்போட்டி நடைபெறும் சிட்னி கிரிக்கெட் மைதானம் பந்துவீச்சாளர்கள், பேட்டர்களுக்கு சமமான சாதகத்தை வழங்கும் மைதானமாக இருந்து வருகிறது. மேலும் இங்கு இதுவரை 21 ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் அதில், முதலில் பேட்டிங் செய்த அணி 12 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 8 முறையும் என வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 160 ரன்களாக உள்ள நிலையில், இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்சமாக 221 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

AUS vs PAK T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 26
  • ஆஸ்திரேலியா - 12
  • பாகிஸ்தான் - 13
  • முடிவில்லை - 01
Advertisement

AUS vs PAK 2nd T20I: Where to Watch?

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில்  நேரலையில் காணலாம். 

Australia vs Pakistan 2nd T20I Probable Playing XI

Advertisement

ஆஸ்திரேலியா உத்தேச லெவன்: ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ் (கே), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்

பாகிஸ்தான் உத்தேச லெவன்: முகமது ரிஸ்வான் (கே), பாபர் ஆசாம், சாஹிப்சாதா ஃபர்ஹான், உஸ்மான் கான், ஆகா சல்மான், இர்ஃபான் கான், ஹசீபுல்லா கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா

AUS vs PAK 2nd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான், ஜோஸ் இங்கிலிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - பாபர் ஆசாம், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், உஸ்மான் கான்
  • ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ்கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ஹாரிஸ் ரவுஃப் (துணை கேப்டன்), ஷஹீன் அஃப்ரிடி, சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ்
Advertisement

AUS vs PAK 2nd T20 Dream11 Prediction, AUS vs PAK Dream11 Prediction, Today Match AUS vs PAK, AUS vs PAK T20 Series, AUS vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs PAK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs Pakistan

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News