ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா அதிரடியாக விளையாடினார். அவருடன் களமிறங்கிய தனுஷ்கா குணத்திலகா 17 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய இலங்கை வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன், ஜெய் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.