ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது.
Advertisement
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஃபிஞ்ச், பென் மெக்டர்மோட், ஜோஷ் இங்கிலிஷ், மேக்ஸ்வெல் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய மேத்யூ வேட் அதிரடியாக விளையாடி 47 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது.
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.