வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் 17ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்கன்சி 50 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களம் இறங்கினர்.

Advertisement

இதில் ஸ்மித் 12 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய லபுஷாக்னே 10 ரன்னிலும் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப் பந்து வீச்சில் அவுட் ஆகினர். இதையடுத்து கேமரூன் க்ரீன் களம் இறங்கினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 59 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் 2ஆவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மட்டுமே நிலைத்து விளையாடினார்.

மற்ற வீரர்களில் உஸ்மான் கவாஜா மட்டுமே அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்தார். ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகளை ஷமர் ஜோசப் விரைவாக கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 81.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 119 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 95 ரன்கள் பின்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தந்து. அந்த அணியின் கேப்டன் கிரேய்க் பிராத்வைட் ஒரு ரன்னிலும், சந்தர்பால் ரன்கள் ஏதுமின்றியும், அலிக் அதனாஸ் ரன்கள் ஏதுமின்றியும், கெவம் ஹெட்ஜ் 3 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

அதன்பின் இணைந்த கிர்க் மெக்கன்ஸி - ஜஸ்டின் கிரீவ்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மெக்கன்ஸி 26 ரன்களுக்கும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 24 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Advertisement

இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், நாதன் லையன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 26 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 6.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேவுசெய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News