வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது  டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - ஜோஷ் இங்கிலிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஜோஷ் இங்லிஸ் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த வார்னர் - கேப்டன் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 

Advertisement

இதில் மிட்செல் மார்ஷ் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 22 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னரும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர். பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி தள்ளி 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 16 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் தனது அதிரடியைக் கைவிடாத கிளென் மேக்ஸ்வெல் தொடர்ந்து சிக்சரும், பவுண்டரிகளையும் விளாசியதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இறுதியில் அவருடன் இணைந்த டிம் டேவிட்டும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ரன்களை வாரி வழங்கினர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் மேக்ஸ்வெல் 12 பவுண்டரி, 8 சிச்கர்கள் என 120 ரன்களையும், டிம் டேவிட் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 31 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News