Australia Women vs Sri Lanka Women Dream11 Prediction, T20 World Cup 2024:  ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. அதேசமயம் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிகொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

AUS W vs SL W World Cup Match: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா மகளிர் vs இலங்கை மகளிர்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - அக்.05 மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

AUS W vs SL W T20I Pitch Report

ஆஸ்திரேலியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த லீக் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 50 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 30 முறையும், சேஸிங் செய்த அணி 20 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்கலாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 215 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

AUS W vs SL W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 07
  • ஆஸ்திரேலியா மகளிர் அணி - 07
  • இலங்கை மகளிர் அணி - 00
Advertisement

AUS W vs SL W T20I Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Australia Women vs Sri Lanka Women Probable Playing XI

Advertisement

ஆஸ்திரேலிய மகளிர் அணி: பெத் மூனி, அலிசா ஹீலி (கே), ஜார்ஜியா வேர்ஹாம், எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லே கார்ட்னர், ஃபோப் லிச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், அனாபெல் சதர்லேண்ட், சோஃபி மோலினியூக்ஸ், அலனா கிங், மேகன் ஸ்கட்.

இலங்கை மகளிர் அணி: விஷ்மி குணரத்னே, சாமரி அத்துபத்து (கேப்டன்), ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நீலாக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, சச்சினி நிசன்சாலா, சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோத்னி.

AUS W vs SL W T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - அலிசா ஹீலி, பெத் மூனி
  • பேட்ஸ்மேன்கள்-எல்லிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், ஹர்ஷிதா சமரவிக்ரமா
  • ஆல்-ரவுண்டர்கள் - சாமரி அத்தபத்து (கேப்டன்), அனாபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் – சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோத்னி, அலனா கிங்.
Advertisement

AUS W vs SL W T20I Dream11 Prediction, AUS W vs SL W Dream11 Team, Fantasy  Cricket Tips, AUS W vs SL W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia Women vs Sri Lanka Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News