AUS vs WI: முதல் டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது, டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன் படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கான தங்களது பிளேயிங் லெவனை இரு அணிகளும் அறிவித்துள்ளன. இதில் கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற்ற டேவிட் வார்னருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கவேம் ஹாட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷமார் ஜோசப் ஆகிய அறிமுக வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர்த்து கீமார் ரோச், சந்தர்பால், அல்ஸாரி ஜோசப் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்; உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லையன், ஜோஷ் ஹசில்வுட்.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்; கிரேக் பிராத்வைட் (கேப்டன்), டேக்னரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோசுவா டா சில்வா, குடாகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், கீமார் ரோச்.