பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Updated: Sun, Dec 25 2022 10:15 IST
Australia Announce Playing XI To Face South Africa In Second WTC23 Test (Image Source: Google)

டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது. 

பாக்ஸிங் டே என்பது ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது, அவர்களின் முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கும் பழக்கம் இருந்தது. அதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது. அதன்படி கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், லபுசாக்னே, மிட்செல் ஸ்டார்க் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் இப்போட்டியில் டேவிட் வார்னரின் 100ஆவது டெஸ்ட் போட்டி என்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலந்து.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை