ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி தற்சயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் ஆஸ்திரேலிய அணியானது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹோபார்ட்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வானுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சல்மான் ஆகா அணியை வழிநடத்தினார். இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஃபர்ஹான் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். 

Advertisement

பின்னர் இணைந்த பாபர் ஆசாம் -ஹசீபுல்லா கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஹசீபுல்லா கான் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் அடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 3 ரன்களிலும், கேப்டன் ஆகா சல்மான் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாமும் 41 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய இர்ஃபான் கான் 10 ரன்னிலும், ஆப்பாஸ் அஃப்ரிடி ஒரு ரன்னிலும், அதிரடியாக விளையாடிய ஷாஹீன் அஃப்ரிடி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 16 ரன்னிலும், ஜஹாந்தத் கான் 5 ரன்னிலும், சுஃபியான் முகீம் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News