Alyssa Healy Records: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக சதங்களை விளாசிய வீராங்கனை என்ற சாதனையை அலிசா ஹீலி படைத்துள்ளார்.

Advertisement

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் சோபனா மோஸ்டரி 66 ரன்களையும், ருபியா ஹைதர் 44 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதனால் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ஃபீல்ட் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர். இதில் அபாரமாக விளையாடிய அலிசா ஹீலி தனது 7ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலிசா ஹீலி 20 பவுண்டரிகளுடன் 113 ரன்களையும், போப் லிட்ச்ஃபில்ட் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 84 ரன்களைச் சேர்த்து அணிக்கு வேற்றியை சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 24.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் அலிசா ஹீலி சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். அந்தவகையில், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அதிக சதங்கலை விளாசிய ஆஸ்திரேலியா வீராங்கனை என்ற சாதனையை அலிசா ஹீலி படைத்துள்ளார். முன்னதாக மெக் லெனிங் 3 சதங்களை மட்டுமே அடித்த நிலையில், தர்சமயம் அலிசா ஹீலி 4 சதங்கலை விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அதிக சதங்கள்:

  • 4 – அலிசா ஹீலி
  • 3 – மெக் லானிங்
  • 3 – கரேன் ரோல்டன்
Advertisement

இது மட்டுமல்லாமல், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இரண்டு வெவ்வேறு பதிப்புகளில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்த வரலாற்றில் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அலிசா ஹீலி படைத்துள்ளார். முன்னதாக அவர் கடந்த உலகக் கோப்பை தொடரின்  போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சதங்களை விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

உலக ஒருநாள் கோப்பையின் ஒரே பதிப்பில் தொடர்ச்சியான சதங்களை அடித்த வீராங்கனைகள்

  • டெபி ஹாக்லி – இலங்கைக்கு எதிராக 100* மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 100, 1997
  • அலிசா ஹீலி – வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக 129 மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 170, 2022
  • அலிசா ஹீலி – இந்தியாவுக்கு எதிராக 142 மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக 113*

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News