மேக்ஸ் 60 கரீபியன் டி10 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கரீபியன் டைகர்ஸ் - நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கரீபியன் டைகர்ஸ் அணியானது ஜோஷ் பிரௌன், கிறிஸ் லின் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரண்மாக 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜோஷ் பிரௌன் 60 ரன்களைச் சேர்த்தார்.

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 69 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் கரீபியன் டைகர்ஸ் அணியானது 56 ரன்கள் வித்தியாசத்தில் நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் கரீபியன் டைகர்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஷ் பிரௌன் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களை விளாசி 60 ரன்களைக் குவித்தார். அதிலும் குறிப்பாக இசுரு உதானா வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயெ ஜோஷ் பிரௌன் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அந்த ஓவரில் 26 ரன்களைக் குவித்தும் எதிரணி வீரர்களை ஸ்தம்பிக்க வைத்தார். 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்படி, ந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய ஜோஷ் பிரௌன், அடுத்த பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.  அதன்பின் மூன்றாவது பந்தையும் பவுண்டரிக்கு விளாசிய அவர், அடுத்த பந்தை தவறவிட்டாலும், கடைசி இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி மிராட்டினார். இதன்மூலம் ஜோஷ் பிரௌன் அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். இந்நிலையில் ஜோஷ் பிரௌன் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்ட காணொளியானது வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News