மேக்ஸ்வெல் இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா வென்றிருக்காது - சைமன் கேடிச்!

Updated: Sat, Dec 02 2023 12:55 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ததோடு, டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. இதில்அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 46 ரன்களை விளாசி அசத்தினார்.

அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலமாக கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டி20 தொடரிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இதே போட்டியில் கிளன் மேக்ஸ்வெல் இருந்திருந்தால் இந்த கோப்பையை கூட இந்திய அணியால் வென்றிருக்க முடியாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் கேடிச் மறைமுகமாக பேசியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், “ஆஸ்திரேலியா 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் மேக்ஸ்வெல் இருந்திருந்தால் அது நடந்திருக்காது

ஏனெனில் மேக்ஸ்வெல் தவிர்த்து இப்போட்டி மட்டுமல்லாமல் இத்தொடர் முழுவதிலும் எஞ்சிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறினார்கள். குறிப்பாக அவர்கள் நேராக அடிக்காமல் குறுக்கே தவறாக அடித்தனர். அவர்கள் சுழலை சற்று சிறப்பாக எதிர்கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை