PAK vs AUS: முக்கிய வீரர்களின்றி களமிறங்கும் ஆஸ்திரேலியா!

Updated: Tue, Feb 22 2022 11:13 IST
Australia Pace Trio Rested For Pakistan's Limited Overs Series (Image Source: Google)

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் மறுத்ததால் ஆஸ்திரேலிய அணியும் தொடரை ரத்து செய்யுமா என பாகிஸ்தான் ரசிகர்கள் பயந்திருந்தார்கள். 

இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் அறிவித்துள்ளது. 

கடந்த 1998-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்குச் செல்வதால் இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 

டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும், கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 

மேலும் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் முன்னணி வீரர்கள் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், ஜொஷ் ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய ஒருநாள் & டி20 அணி: ஆரோன் பிஞ்ச் (கே), சீன் அபோட், ஆஷ்டன் அகர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், பென் மெக்டெர்மொட், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை