மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: அலீசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!

Updated: Mon, Aug 26 2024 09:22 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற இருந்தது. இத்தொடருக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்ற நிலையில், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி அறிவித்திருந்தது. 

இந்நிலையில் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் நடந்தது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வருமா என்பதும் கேள்விகுறியாகவே இருந்தது.

இந்நிலையில், நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் இதில் போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

இதுவரை 6 முறை உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணியானது, ஏழாவது முறையாக மீண்டும் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதன்படி அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணியின் துணை கேப்டனாக தஹ்லியா மெக்ராத் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு டார்சி பிரௌன், ஆஷ்லே கார்ட்னர், கிரேஸ் ஹேரிஸ், பெத் மூனி, எல்லிஸ் பேர்ரி, அனபெல் சதர்லேண்ட் என நட்சத்திர வீராங்கனைகள் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.

இதனால் நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய அணியானது, இதில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி: அலிசா ஹீலி (கே), டார்சி பிரௌன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், டெய்லா விலேமின்க், ஜார்ஜியா வேர்ஹாம்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை