வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா- தகவல்

Updated: Wed, May 26 2021 18:31 IST
Australia to play five T20Is against Bangladesh in August: Report (Image Source: Google)

இந்தியாவில் இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு டி20 தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்ற சந்தேகம் இன்னும் நிலவி வருகிறது. 

இருப்பினும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியை தயார் செய்து வருகிறது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் அடுத்தடுத்து 17 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இதற்கிடையில் ஆஸ்திரேலிய அணியும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆஸ்திரேலிய அணி வங்கதேச சென்று ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து வெளியான தகவலில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடர் முடிந்ததும், ஆஸ்திரேலிய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லவுள்ளது. இத்தொடருக்கான தேதி மற்றும் மைதானங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை