பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மெக்ஸ்வீனி, இங்கிலிஸுக்கு இடம்!

Updated: Sun, Nov 10 2024 08:30 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலா 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது. அந்தவகையில் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் நிலையில் அடுத்தாடுத்த போட்டிகள் அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், ஹர்ஷித் ரானா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் காயம் காரணமாக குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தங்கள் இடங்களை இழந்துள்ளனர். மேலும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அக்ஸர் படேலும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர்கள் நாதன் மெக்ஸ்வீனி மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களில் யாரேனும் ஒருவர் அணியின் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. 

அதேசமயம் டேவிட் வார்னரின் ஓய்வு பிறகு தொடக்க வீரராக களமிறங்கி வந்த ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் மிடில் ஆர்டரில் விளையாடவுள்ளார். அவருக்கு துணையாக டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஆகியோரையும் மிடில் ஆர்டரில் பயன்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதவிர்த்து மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லையன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

Also Read: Funding To Save Test Cricket

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை