டி20 உலகக்கோப்பை தோடரில் நாளை நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Advertisement

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs வங்கதேசம் 
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம்
  • நேரம் - மாலை 3.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம் 

ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதனால் அந்த அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

அணியின் பேட்டிங் ஆர்டரில் வார்னர், ஸ்மித், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டோய்னிஸ் இருப்பது பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சுலும் ஹசில்வுட், ஸ்டார்க், ஸாம்பா இருப்பதால் இப்போட்டியில் நிச்சயம் ஆஸி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வங்கதேச அணியைப் பொறுத்தவரை தொடரில் தனது கடைசி போட்டியில் விளையாடிகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் அந்த அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. 

Advertisement

இதனால் தொடரில் ஆறுதல் வெற்றியையாவது தேட அந்த அணி மிகவும் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 9
  • ஆஸ்திரேலியா வெற்றி - 5
  • வங்கதேச வெற்றி - 4

உத்தேச அணி

Advertisement

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கே), ஸ்டீவன் ஸ்மித்/ ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா

வங்கதேசம்- முகமது நைம், லிட்டன் தாஸ் , சௌம்யா சர்க்கார், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா (கே), அஃபிஃப் ஹொசைன், ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், நசும் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது

Also Read: T20 World Cup 2021

Advertisement

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - லிட்டன் தாஸ்
  • பேட்டர்ஸ் - முஷ்பிக்கூர் ரஹீம், நைம் ஷேக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆரோன் ஃபின்ச்
  • ஆல்-ரவுண்டர்கள் - மேஹதி ஹசன், கிளென் மேக்ஸ்வெல்
  • பந்துவீச்சாளர்கள் - தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News