இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 22ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி ஏற்கெனவே தொடரை இழந்துள்ளதால் ஆறுதல் வெற்றியையாவது பதிவுசெய்ய முனையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
  • இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்
  • தேதி - நவம்பர் 22ஆம் தேதி
  • நேரம் - காலை 8.50 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை வென்று அசத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் பேட்டிங் தான். மேலும் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் தாங்கள் தலைமை தாங்கிய முதல் ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியுள்ளனர். 

அதைத்தவிர்த்து டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுசாக்னே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டொய்னிஸ் என அதிரடி பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. பந்துவீச்சில் ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க்,ஆஷ்டன் அகர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், நிச்சயம் இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அதேசமயம் இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றாலும் ஒருநாள் தொடரை இழந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த அணியின் பேட்டிங் ஒவ்வொரு போட்டியிலும் சோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரு போட்டிகளில் ஒன்றில் டேவிட் மாலனும், மற்றொன்றி சாம் பில்லிங்ஸ் ஆகியோரைத்தவிர மற்ற வீரர்கள் சொதப்பியது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்பில் இங்கிலாந்து அணி களமிறங்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 154
  • ஆஸ்திரேலியா - 86
  • இங்கிலாந்து - 63
  • முடிவில்லை - 02

உத்தேச அணி 

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஸ்சாக்னே, அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா

Advertisement

இங்கிலாந்து - ஜேசன் ராய், பிலிப் சால்ட், டேவிட் மாலன், ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர் (கே), லியாம் டாசன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, லூக் வூட், ஒல்லி ஸ்டோன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News