ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement

கடைசியாக இங்கிலாந்து அணி விளையாடிய போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் கடந்த 26ஆம் தேதி நடைபெற்றது.

Advertisement

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இங்கிலாந்து இன்னிங்சின் போது மழைக்குறுக்கிட்டதால் டி.ஆர்.எஸ் விதிப்படி இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 111 ரன்களை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து வீரர்கள் வெற்றிக்காக போராடிய போதும் அந்த அணியால் 14.3 ஓவர்களில் 105/5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி கண்டது.

மறுபுறம், கடந்த 26ஆம் தேதியன்று ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் இடையிலான போட்டியில் ஸ்டாய்னிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் ஒருவேளை இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் அதன்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இங்கிலாந்து அணிக்கு வாழ்வா? சாவா ஆட்டமாக மாறலாம்.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
  • இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - மதியம் 1.30 மணி 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 22
  • ஆஸ்திரேலியா - 10
  • இங்கிலாந்து - 11
  • முடிவில்லை - 01

உத்தேச அணி

Advertisement

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கே), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (கே), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஜோஸ் பட்லர், மேத்யூ வேட்
  • பேட்டர்: டேவிட் மாலன், டேவிட் வார்னர், டிம் டேவிட்
  • ஆல்-ரவுண்டர்: மார்கஸ் ஸ்டோனிஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன்
  • பந்துவீச்சு: மார்க் வுட், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்
Advertisement

*. This fantasy XI is based on the understanding, analysis, knowledge, and instinct of the writer. While making your prediction, consider the points mentioned, and make your own decision.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News