டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இந்த நிலையில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் ஆணிகள் - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்.
  • நேரம் - அதிகாலை 5.30 மணி

போட்டி முன்னோட்டம்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே இத்தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதிலும் இந்த போட்டி இரண்டே நாளில் முடிந்தது பெரும் சர்ச்சையையும், போட்டி நடைபெற்ற பிரிஸ்பேன் மைதானத்தை மோசமான பிட்ச் என ஐசிசி தெரிவித்ததும் பெரும் பேசுபொருளானது.

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதால் இப்போட்டியிலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகம் அதிகம் எனறே கூறப்படுகிறது. அதற்கேற்ப ஆஸ்திரேலிய அணியும் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலாண்ட், கேமரூன் க்ரீன் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளது. இருப்பினும் இந்த அணியில் ஜோஷ் ஹசில்வுட் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் 36 வயதான டேவிட் வார்னருக்கு இது 100ஆவது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 14ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெறும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்காத ஏக்கத்தை தணிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். 

மறுபக்கம் டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் முடிந்த அளவு பந்துவீச்சில் ஈடுகொடுத்தாலும், பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பியது. மேலும் முதல் போட்டி நடைபெற்ற மைதானமும் இத்தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இதனால் அவர்கள் இப்போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போட்டியில் தோல்வியடைந்தால் தொடரையும் இழக்கும் என்பதால் நிச்சயம் அந்த அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அந்த அணியின் பேட்டிங்கில் எல்கர், சரெல் எர்வி, டெம்பா பவுமா, வெண்டர் டுசென் ஆகியோரும் பந்துவீச்சில் ரபாடா, நோர்ட்ஜே, இங்கிடி, கோட்ஸி ஆகியோருடன் கேசவ் மகாராஜும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 99
  • ஆஸ்திரேலியா - 53
  • தென் ஆப்பிரிக்கா - 26
  • முடிவில்லை - 20

உத்தேச லெவன்

Advertisement

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலந்து.

தென் ஆப்பிரிக்கா - டீன் எல்கர் (கே), சரேல் எர்வீ, கயா சோண்டோ, டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரைன், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, ஆண்ட்ரிச் நார்ட்ஜே, ஜெரால்ட் கோட்ஸி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - கைல் வெர்ரைன்
  • பேட்டர்ஸ் - உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, டெம்பா பவுமா, காயா சோண்டோ
  • ஆல்-ரவுண்டர்கள் - டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, ஸ்காட் போலண்ட்/ஜோஷ் ஹேசில்வுட்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News