டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் குரூப் 1இல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

Advertisement

ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் அரைஇறுதிக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Advertisement

இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற அந்த அணியும் முயற்சிக்கும் என்பதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இலங்கை
  • இடம் - பெர்த் மைதானம்
  • நேரம் - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 16
  • இலங்கை - 8
  • ஆஸ்திரேலியா - 8

உத்தேச லெவன்

Advertisement

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கே), டேவிட் வார்னர், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ்,
    
இலங்கை: குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, அஷேன் பண்டார, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர்: குசல் மெண்டிஸ், மேத்யூ வேட்
  •      பேட்டிங்: டேவிட் வார்னர், தனஞ்சய டி சில்வா, டிம் டேவிட்
  •      ஆல்-ரவுண்டர்: வனிந்து ஹசரங்க, மிட்செல் மார்ஷ்
  •      பந்துவீச்சு: ஜோஷ் ஹேசில்வுட், மகேஷ் தீக்ஷனா, ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க்

*. This fantasy XI is based on the understanding, analysis, knowledge, and instinct of the writer. While making your prediction, consider the points mentioned, and make your own decision.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News