ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர், தற்போது ஐபிஎல்-லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசன் வரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மெகா ஏலத்தில் டெல்லி அணி அவரை எடுத்தது. தற்போது டெல்லி அணியில் அதிரடி காட்டி வருகிறார் வார்னர்.

Advertisement

டேவிட் வார்னர் ஐதராபாத் அணியில் இருந்தபோது அவருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் ஆர்வம் அதிகரித்தது. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய படங்களின் பாடல்களையும், டயலாக்குகளையும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்டு இந்தியர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆகி விட்டார் டேவிட் வார்னர்.

Advertisement

குறிப்பாக இவர் கடந்தாண்டு வெளியிட்ட புஷ்பா படத்தின் ரீல்ஸ் மிகவும் வைரல் ஆனது. அதுமட்டுமின்றி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடலுக்கு இவர் குடும்பத்துடன் ஆட்டம் போட்ட ரீல்ஸ் காணொளிக்கும் லைக்குகள் குவிந்தன.

 

இந்நிலையில், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி, கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் ‘வயலன்ஸ்’ என்கிற பஞ்ச் டயலாக்கை பேசி அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. கையில் கிரிக்கெட் பேட் உடன் ராக்கி பாய் ஆக மாறி அந்த வசனத்தை அசத்தலாக பேசி அதகளப்படுத்தி உள்ளார் வார்னர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News