ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி பெர்த்தில் இன்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

அந்த அணியில் சுனே லூஸ் 26, மஸபடா கிளாஸ் 10 ஆகியோரையைத் தவிற மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், வெறும் 76 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டார்சி பிரௌன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் போப் லிட்ச்ஃபீல்ட் 4 ரன்களுக்கும், எல்லி பெர்ரி 3 ரன்களுக்கும், தஹ்லியா மெக்ராத் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணியும் 12 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் பெத் மூனியுடன் இணைந்த கேப்டன் எல்லிஸ் பெர்ரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்தார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் இன்னிங்ஸில் முன்னிலையும் பெற்றுக்கொடுத்தனர். மேலும் இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பெத் மூனி 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய அனபெல் சதர்லேண்டும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதில் சதர்லேண்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுமுனையில் சதத்தை நெருங்கிய கேப்டன் அலீசா ஹீலி 16 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்த நிலையில் டெல்மி டக்கரிடம் விக்கெட்டை இழந்து ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் அனபெல் சதர்லேண்ட் 54 ரன்களுடனும், ஆஷ்லே கர்ட்னர் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் மஸபடா கிளாஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 175 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News