டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ஆவேஷ், வெங்கடேஷ்!

Updated: Wed, Oct 13 2021 11:01 IST
Avesh Khan and Venkatesh Iyer to join Indian team as net bowlers during T20 World Cup (Image Source: Google)

தற்போது ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவேஷ் கான், ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருக்குமாறு பிசிசிஐ-யால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா். ஏற்கெனவே உம்ரான் மாலிக் என்ற வலை பந்துவீச்சாளராக இருக்கும் நிலையில் அவேஷ் கானும் சோ்க்கப்படுகிறாா்.

எனினும், அவேஷ் தயாா்நிலை வீரா்கள் பட்டியலில் சோ்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அவா் 23 விக்கெட்டுகள் சாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹாா்திக் பாண்டியா பௌலிங் செய்ய இயலாத நிலையில் இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளா் சோ்க்கப்பட ஆலோசனை நடைபெறும் நிலையில் பிசிசிஐ இந்த நகா்வை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, ஹாா்திக் பாண்டியா பேட்டராக மட்டுமே செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட இருக்கிறாா். அவருக்கான ‘கவா்’ வீரராக கொல்கத்தா நைட் ரைடா்ஸில் இருக்கும் வெங்கடேஷ் ஐயா் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் தெரிகிறது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை அறிவிப்பு வரும் வரை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருக்கும் படி பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை