உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நடைபெற்றது. கான்பூா் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Advertisement

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கும் நியூஸிலாந்து 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இந்திய அணி 70 ஓவா்களில் 276/7 ரன்களுடன் டிக்ளோ் செய்வதாக அறிவித்தது.

Advertisement

மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 540 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 45 ஓவா்களில் 140/5 ரன்களை எடுத்துத் தடுமாறியது. ஹென்றி நிக்கோல்ஸ் 36, ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் நியூசிலாந்து அணி இன்று 56.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மும்பை டெஸ்டை 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. நியூசிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

ஆட்ட நாயகன் விருது மயங்க் அகர்வாலுக்கும், தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது. 

Advertisement

இந்நிலையில் அக்‌ஷர் படேல், ஜடேஜா, அஜாஸ் படேல், ரச்சின் ரவிந்திரா ஆகிய நால்வரும் இணைந்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டு பாராட்டு பெற்றுள்ளது. 

நால்வரின் சட்டைகளிலும் பின்னால் எழுதப்பட்ட பெயர்களின் வழியே அக்‌ஷர் படேல், ரவிந்திர ஜடேஜா ஆகிய பெயர்கள் ஆங்கிலத்தில் வரிசையாக உள்ளன. இந்தப் புகைப்படம் ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News