NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாபர் ஆசாம் - காணொளி!

Updated: Thu, Mar 20 2025 20:21 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

அசத்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டி20 தொடர் முடிந்த கையோடு இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஏனெனில் சமீப காலங்களில் பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் அந்த அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தது. மேற்கொண்டு அணியின் மூத்த வீரர்கள் மீதும் கடும் விமர்னங்கள் எழுந்து வருகின்றன. இதனால் டி20 அணியில் இருந்து மூத்த வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் மோசமான ஃபார்ம் காரணமாக தடுமாறி வருகிறார். இதனால் நியூசிலாந்து ஒருநால் தொடரின் மூலம் தனது ஃபார்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் பாபர் ஆசாம் திவீர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதில் அவர் ஆக்ரோஷமாக செயல்பட்டு பேட்டிங் செய்வதை காணொளியின் காணமுடியும். 

சாம்பியன்ஸ் டிராபியிலும் அவரது செயல்திறன் மோசமாக இருந்ததால், பாபர் தற்போது மிகுந்த அழுத்தத்தில் உள்ளார். தொடரின் முதல் போட்டியில் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக அரைசதம் அடித்தார், ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் பெரிய ஷாட்களை விளையாட இயலாமை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. எனவே தற்போது நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகிஃப் ஜாவேத், பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், இர்பான் நியாசி, நசீம் ஷா, சுஃபியான் முகீம், தயப் தாஹிர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை