வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!

Updated: Fri, Aug 16 2024 15:52 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியானது வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.  இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 21 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள காரணத்தால், இரண்டாவது போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஏனெனில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் ஓய்வரை, ரசிகர்களின் இருக்கை மற்றும் உள்கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதன் காரணாக, இங்கு நடைபெறும் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதில் இல்லை என்றும், ஒருவேளை இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி இருந்தால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என்று பிசிபி அறிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், தங்கள் பயிற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் அணி வீரர்கள் இன்றைய தினம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் வலை பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cricket Pakistan (@officialcricketpakistan)

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்படி பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷஷாத் பந்துவீச்சில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட பாபர் ஆசாம், அவரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் காயமடைந்ததும், அவரது பந்துவீச்சீல் க்ளின் போல்டாவது போன்ற காட்சிகள் அக்காணொளியில் இடம்பெற்றுள்ளன. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க சில நாள்களே உள்ள நிலையில் பாபர் ஆசாம் இதுபோல் வலைபயிற்சியிலேயே சொதப்புவது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை