Khurram shahzad
PAK vs BAN, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களையும் அகா சல்மான் 54 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொர்ற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Khurram shahzad
-
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய குர்ராம் ஷஷாத்!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் குர்ராம் ஷஷாத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ...
-
PAK vs BAN, 2nd Test: லிட்டான் தாஸ் அபார சதம்; சரிவில் இருந்து மீண்டு எழுந்தது வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களை எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
PAK vs BAN, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையில் வங்கதேச அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. ...
-
PAK vs BAN, 1st Test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பயிற்சியில் கோபத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் - காணொளி!
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட்டை இழந்ததன் காரணமாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டம்புகளை எட்டி உதைத்த சம்பவம் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது ...
-
வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறும் பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக பாகிஸ்தன் அணி தயாராகி வரும் நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் வலை பயிற்சியில் தடுமாறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47