வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
Advertisement
அதன்படி விளையாடிய அந்த அணியில் முகமது நைம், முனிம் ஷரியர், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிய மறுமுனை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதன்பின் 60 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அவரும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபருக்கி, அஸ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.