வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போடியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஏற்கெனவே வங்கதேச அணி முதலிரண்டு போட்டிகளில் தோல்விடைந்த நிலையில் ஆறுதல் வெற்றியையாவது பதிவுசெய்யும் நோக்கோடு களமிறங்கியது. 

Advertisement

அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் தமிம் இக்பால் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நமுல் ஹொசைன் - முஷ்பிக்கூர் ரஹிம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழப்பை தடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

அதன்பின் 53 ரன்களில் நஜ்முல் ஹொசைன் ஆட்டமிழக்க, 70 ரன்களைச் சேர்த்திருந்த முஷ்பிக்கூரும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய மஹ்முதுல்லா, அஃபிஃப் ஹொசைன், மெஹிதி ஹசன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

ஆனாலும் தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட ஷாகிப் அல் ஹசன் அரைசதம் கடந்த நிலையில் 75 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் வங்கதேச அணி அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News