வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டில் சில்ஹாட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் தமிம் இக்பால் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் லிட்டன் தாஸ் 26 ரன்களிலும், நஜ்முல் ஹுசைன் 25 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த ஷாகிப் அல் ஹசன் - தவ்ஹித் ஹிரிடோய் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைந்து அசத்தினர். அதன்பின் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாகிப் அல் ஹசன் 93 ரன்களிலும், தவ்ஹித் ஹிரிடோய் 92 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

இதையடுத்து வந்த முஷ்பிக்கூர் ரஹிமும் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிடார். பின்னர் வந்த வீரர்களாலும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன்மூல 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் கிரஹாம் ஹியூம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ஸ்டீபன் தொஹானி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் இந்த இணையால் நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பால் ஸ்டிர்லிங் 22 ரன்களுக்கும், தொஹானி 34 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். 

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரூ பால்பிர்னி 5, ஹேரி டெக்டர் 3, லோர்கன் டக்கர் 6, கர்டிஸ் காம்பேர் 16 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதில் 7ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜார்ட் டக்ரெல் மட்டும் நிதானமாக விளையாடி 45 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

வங்கதேச அணி தரப்பில் எபோடட் ஹொசைன் 4 விக்கெட்டுகளையும், நசும் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் அயர்லாந்து அணி 30.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்ததுடன், 183 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் படுதோல்வியைச் சந்தித்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News