BAN vs NZ, 2nd Test: அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ்; மீண்டும் முன்னிலைப் பெற்ற வங்கதேசம்!

Updated: Fri, Dec 08 2023 18:24 IST
BAN vs NZ, 2nd Test: அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ்; மீண்டும் முன்னிலைப் பெற்ற வங்கதேசம்! (Image Source: Google)

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் அவமான தோல்வியை தவிர்ப்பதற்காக டிசம்பர் 6ஆம் தேதி தாக்காவில் தொடங்கிய 2ஆவது போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து களமிறங்கியது.

இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த களமிறங்கிய நிலையில் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் 35, சகாதத் ஹொசைன் 31 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர், கிளன் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். 

இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் வங்கதேசத்தின் துல்லியமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் டாம் லாதம் 4, டேவோன் கான்வே 11, கேன் வில்லியம்சன் 13, ஹென்றி நிக்கோலஸ் 1, டாம் பிளன்டல் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள்களின் விக்கெட்களை சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். 

இதனால் 46/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு டார்ல் மிட்சேல் 18, சான்ட்னர் 1 ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அதன் காரணமாக 97/7 என சரிந்த நியூசிலாந்து 150 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லோயர் மிடில் ஆர்டரில் மெதுவான பிட்ச்சில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினால் வேலைக்காகாது என்பதை உணர்ந்த கிளன் பிலிப்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடினர். 

அவருக்கு 8ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு கை கொடுத்த கைல் ஜெமிசன் 20 ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் வங்கதேச பவுலர்களை வெளுத்து வாங்கிய கிளன் பிலிப்ஸ் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 87 (72) ரன்களை 120.83 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி நியூசிலாந்தை ஓரளவு காப்பாற்றிய ஆட்டமிழரந்தார். அதனால் தப்பிய நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் எடுத்து 8 ரன்கள் முன்னிலையும் பெற்ற நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன், தைஜூல் இஸ்லாம் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 3ஆவது நாள் முடிவில் 38/2 என்ற நிலையில் விளையாடி வருகிறது. அந்த அணிக்கு ஹசன் ஜாய் 2, சாண்டோ 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் களத்தில் ஸாகிர் ஹசன் 16, மோனிமூல் ஹைக் ஆகியோர் உள்ளனர். தற்போது 30 ரன்கள் வங்கதேசம் முன்னிலை பெற்றுள்ள நிலையில் கடைசி 2 நாட்களில் இன்னும் பிட்ச் பேட்டிங்க்கு சவாலாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை