BAN vs PAK, 1st T20I: நவாஸின் அடுத்தடுத்த சிக்சரால் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய அந்த அணி எதிரணி பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கைத் துரத்திய பாகிஸ்தன் அணியின் நட்சத்திர வீரர்கள் முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம், சோயிப் மாலி, ஹைதர் அலி என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஃபகர் ஸமான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தார். அதன்பின் 34 ரன்களில் ஃபகர் ஸ்மான் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து குஷ்டில் ஷாவும் 34 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய முகமது நவாஸ், சதாப் கான் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதன்மூலம் 19.2 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Also Read: T20 World Cup 2021
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.