BAN vs PAK, 1st Test: வெற்றியை நோக்கி பாகிஸ்தான்; தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!

Updated: Mon, Nov 29 2021 17:04 IST
Ban vs Pak, 1st Test: Visitors 93 runs away from target (Stumps, Day 4) (Image Source: Google)

வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதன்பின் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 44 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி அஃப்ரிடியின் பந்துவீச்சில் வீழ்ந்தது. 

இதனால் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பின் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபித் அலி - அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார். 

இதன்மூலம் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்களைச் சேர்த்தது. இதில் அபித் அலி 56 ரன்களுடனும், அப்துல்லா ஷஃபிக் 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 93 ரன்கள் எடுத்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை