நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் நஜ்முல் ஹொசைன், சௌமியா சர்க்கார் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் அரைசதம் கடந்ததுடன், 42 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசி 69 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

ஆனால் மறுமுனையில் தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி வந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 150 ரன்களைத் தாண்டியது. பின் 68 ரன்கள் எடுத்திருந்த ஷாகிப் அல் ஹசனும் விக்கெட்டை இழந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, முகமது வாசிம் ஜூனியர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News